RECENT NEWS

கிளாம்பாக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
கின்னஸ் சாதனை நாள்: உலகின் உயரமான, குட்டையான பெண்கள் சந்திப்பு

கின்னஸ் சாதனை நாள்: உலகின் உயரமான, குட்டையான பெண்கள் சந்திப்பு

Nov 21, 2024

1261

உலக கின்னஸ் சாதனை நாளை முன்னிட்டு, உலகின் உயரமான பெண்ணான துருக்கியின் ருமெய்சா கெல்கி மற்றும் இந்தியாவின் ஜோதி அம்கே ஆகியோர் கின்னஸ் சாதனை ஐகான்களாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், லண்டனில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.ஆராய்ச்சியாளரான 7 அடி உயரம் கொண்ட ருமெய்சா ஆங்கிலத்திலும், 2 அடி உயரம் கொண்ட இந்தியாவின் ஜோதி அம்கே ஹிந்தியிலும் உரையாடினர். கின்னஸ் உலக சாதனை நாளின் 20ம் ஆண்டு விழாவையொட்டி, இரு பெண்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக, கின்னஸ் சாதனைப் புத்தக தலைமை ஆசிரியர் கிரெய்க் க்ளெண்டே தெரிவித்தார்.

ஒரு மணி நேரத்தில் அதிகமுறை கால்பந்தை தட்டி முந்தைய உலக சாதனையை முறியடிக்க தடகள வீரர் முடிவு

ஒரு மணி நேரத்தில் அதிகமுறை கால்பந்தை தட்டி முந்தைய உலக சாதனையை முறியடிக்க தடகள வீரர் முடிவு

Oct 13, 2024

585

ஒரு மணி நேரத்தில் அதிக முறை கால்பந்தை தட்டி முந்தைய உலக சாதனையை முறியடிப்பதை கியூபா தடகள வீரர் எரிக் ஹெர்னாண்டஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஹவானா நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் லாபியில், நடுவர்கள் முன்னிலையில் தமது தலை மற்றும் கால்களால் ஒரு மணி நேரத்தில் 13,985 முறை பந்தை தட்டினார்.2017 ஆம் ஆண்டு, மெக்சிகோ வீரர் ஆபிரகாம் முனோஸ் ((Abraham Muñoz,)) ஒரு மணி நேரத்தில் 11,901 முறை கால்பந்தை தட்டி உலக சாதனை படைத்தார்.தற்போது, 57 வயதான கியூபா வீரர் எரிக் ஹெர்னாண்டஸ் 13,985 முறை தட்டிய புதிய சாதனையானது கின்னஸ் அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது.

ஒரே அபிநயத்தில் குரு சமர்ப்பணம் பரதநாட்டியம் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்

ஒரே அபிநயத்தில் குரு சமர்ப்பணம் பரதநாட்டியம் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்

Sep 02, 2024

500

சென்னையை அடுத்த அம்பத்தூரில், நடன ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் சுமார் 500 மாணவிகள் இணைந்து குரு சமர்ப்பணம் என்ற பெயரில் பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடினர்.பள்ளி வளாகத்தில் அணிவகுத்து நின்ற 5 வயது முதல் 17 வயது வரையிலான மாணவிகள், பாடலுக்கு தகுந்தபடி ஒரே மாதிரி அபிநயத்தில் நடனமாடி, தங்களது பரத நாட்டிய ஆசிரியருக்கு குரு சமர்ப்பணம் செய்த நிகழ்வு ராஃபா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

604 கி.மீ. தூரம் கடலில் நீச்சல் பயணம் ; மாற்றுத்திறனாளிகளின் உலக சாதனை முயற்சி

604 கி.மீ. தூரம் கடலில் நீச்சல் பயணம் ; மாற்றுத்திறனாளிகளின் உலக சாதனை முயற்சி

Aug 09, 2024

416

மாற்றுத் திறனாளி குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வேவ் ரைடர்ஸ் நிறுவனம் சார்பில் உலக சாதனை முயற்சியாக 15 பேர் ராமேஸ்வரம் முதல் சென்னை மெரினா கடற்கரை வரை 604 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீச்சல் பயணம் மேற்கொண்டுள்ளனர்.அதில், முற்றிலும் பார்வை திறன் அற்ற 11 வயது மாணவர் லக்ஷய்குமார் என்பவர் பயிற்றுநரின் குரல் வரும் திசையில் பயணித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஸ்கேட்போர்டு போட்டியில் புதிய கின்னஸ் சாதனை படைத்த பாரா அதெலெடிக் வீராங்கனை

ஸ்கேட்போர்டு போட்டியில் புதிய கின்னஸ் சாதனை படைத்த பாரா அதெலெடிக் வீராங்கனை

Jul 24, 2024

395

ஸ்கேட்போர்டில் கைகளால் சறுக்கிச் செல்லும் மகளிருக்கான போட்டியில் அமெரிக்க பாரா அதெலெடிக் வீராங்கனை கன்யா செசர் புதிய சாதனை படைத்தார்.பிறவியிலேயே இடுப்புக்குக் கீழே இரண்டு கால்களும் இல்லாத 31 வயது வீராங்கனை, ஸ்கேட்போர்டு போட்டியில் கின்னஸ் சாதனை படைத்தார்.9 வயதில் இருந்தே கைகளால் ஸ்கேட்போர்டு பயிற்சி எடுத்து வந்ததாக கூறிய அவரது சாதனை 2025ஆம் ஆண்டின் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.

டிஸ்னிலேண்ட் பாரிஸ் சார்பில் பிரெஞ்சு தேசிய தின கொண்டாட்டம்... வானில் 12 நிமிட வர்ணஜாலம் மூலம் கின்னஸ் உலக சாதனை

டிஸ்னிலேண்ட் பாரிஸ் சார்பில் பிரெஞ்சு தேசிய தின கொண்டாட்டம்... வானில் 12 நிமிட வர்ணஜாலம் மூலம் கின்னஸ் உலக சாதனை

Jul 16, 2024

365

பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சி மக்கள் புரட்சி மூலம் தகர்க்கப்பட்டு முடிவுக்கு வந்ததை கொண்டாடும் பிரெஞ்சு தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.அதன் ஒரு நிகழ்வாக டிஸ்னிலேண்ட் பாரிஸ் என்ற பொழுதுபோக்கு பூங்கா சார்பில் நடத்தப்பட்ட தேசிய தின கொண்டாட்டத்தில் வானத்தில் ட்ரோன் கோரியோகிராஃபி வாயிலாக மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை ஒளிரச் செய்தனர்"பியூட்டி அண்ட் தி பீஸ்ட்" மற்றும் "ஸ்லீப்பிங் பியூட்டி" போன்ற கார்ட்டூன் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களை ட்ரோன் கோரியோகிராஃபி வாயிலாக உருவாக்கி வானில் ஒளி வெள்ளம் உருவாக்கப்பட்டதுஇந்த நிகழ்வில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. அப்போது கூடியிருந்த மக்கள் செல்போனில் வாண வேடிக்கையை படம்பிடித்தனர் 

தனியார் அறக்கட்டளை சார்பில் "யோகாவில் உலக சாதனை" நிகழ்ச்சி..  'விபரீத கரணி ஆசனம்' செய்தனர்..

தனியார் அறக்கட்டளை சார்பில் "யோகாவில் உலக சாதனை" நிகழ்ச்சி.. 'விபரீத கரணி ஆசனம்' செய்தனர்..

Jun 17, 2024

393

மதுரையில் மஹாமஹரிஷி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற "யோகாவில் உலக சாதனை" என்ற நிகழ்வில், கொட்டும் மழையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்து கவனத்தை ஈர்த்தனர்.உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், ஆயுதப்படை ஐ.ஜி லட்சுமி, நடிகர் சூரி உள்ளிட்டோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், 6 வயது முதல் 60 வயது உடையவர்கள் வரை பங்கேற்று, 10 நிமிடங்களுக்கு மேல் விபரீத கரணி ஆசனத்தில் நின்று சாதனை புரிந்தனர்.  

2.41 நிமிடங்களில் கீதா தியான ஸ்லோகங்களை ஒப்புவித்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 ஆம் வகுப்பு மாணவன்

2.41 நிமிடங்களில் கீதா தியான ஸ்லோகங்களை ஒப்புவித்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 ஆம் வகுப்பு மாணவன்

May 15, 2024

313

கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவனான திரிசூலவேந்தன், சம்ஸ்கிருத மொழியில் கீதா தியான ஸ்லோகங்களை மனனம் செய்து 2 நிமிடம் 41 விநாடிகள் ஒப்புவித்து ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.சிறு வயது முதலே பஞ்சாங்கம் படிப்பது, சிவ புராணம் பாடுவது, அனுமன் சாலிஷா என ஆன்மீக தளங்களில் பயணித்து வருவதாக மாணவனின் பெற்றோர் மணிகண்டன்-நீலம் தம்பதியர் தெரிவித்தனர்.

போர்ச்சுக்கலில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டியில் உலக சாதனை

போர்ச்சுக்கலில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டியில் உலக சாதனை

Apr 19, 2024

307

போர்ச்சுக்கல் நாட்டின் நாசரே கடலோர பகுதியில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டியில் ராட்சத கடல் அலையை, வீரர்கள் அநாயசமாக கடந்தனர்.ஜெர்மனியை சேர்ந்த  அலைச் சறுக்கு வீரர் செபாஸ்டியன் ஸ்டீட்னர் 94 அடி உயரத்துக்கு எழுந்த அலையை சமாளித்து விளையாடினார்.இதுவரை 86 அடி உயர அலையில் விளையாடியதே சாதனையாக கருதப்படும் நிலையில், ஸ்டீட்னரின் விளையாட்டு புதிய சாதனை என கூறப்படுகிறது.

120 பொருட்களை அடையாளம் காணும் திறமை.. உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 மாத குழந்தை

120 பொருட்களை அடையாளம் காணும் திறமை.. உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 மாத குழந்தை

Feb 19, 2024

777

ஆந்திராவைச் சேர்ந்த 4 மாத குழந்தை ஒன்று Noble World Records என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.நந்திகாமா நகரை சேர்ந்த கைவல்யா என்ற பெண் குழந்தை காய்கறிகள், பழங்கள்,பறவைகள், புகைப்படங்கள் என 120 பொருட்களை அடையாளும் காணும் திறமையை கொண்டுள்ளது. குழந்தையின் திறமையைக் கண்ட Noble World Records குழுவினர், சாதனையில் இடம்பெற்றதற்கான சிறப்பு சான்றிதழை வழங்கினர்.

69,255 பென்சில்களை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்காவின் லோவா மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்

69,255 பென்சில்களை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்காவின் லோவா மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்

Nov 14, 2023

2365

அமெரிக்காவின்லோவா மாகாணத்தைச் சேர்ந்த Aaron Bartholmey என்பவர் 69ஆயிரத்து 255 பென்சில்களை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்க பென்சில் சேகரிப்பாளர்கள் சங்கத்தின் உதவியுடன் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 100 ஆண்டுகளுக்கும் மேலான நினைவு பென்சில்கள், விளம்பர பென்சில்கள், ரோட்டரி போன்களை டயல் செய்ய வடிவமைக்கப்பட்ட பென்சில்கள் மற்றும் விளையாட்டு பென்சில்கள் உள்ளிட்டவை இந்த பென்சில் சேகரிப்பில் அடங்கும்.

BIG STORIES

குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுக்குறீங்களா..?!  முதல்ல இத பாருங்க மேடம்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News